இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அடங்கப் பெற்றிருக்கும் இறைநேசச் செல்வரான இவர்கள், ஹிஜ்ரி 530 ரமலான் பிறை 3 இல் மொரோக்கோவில் பிறந்தனர். தந்தை : சையிது அஹ்மது, அன்னை : பாத்திமா. தந்தையார் மொரோக்கோவின் ஆளுநராகப் பனிபுரிந்தார். இளமையில் மதீனாவில் கல்வி கற்ற இவர்கள் வயதேறப் பெற்றதும் ஹுஸைனி யூசுப் என்ற தர்வேஷுடன் சேர்ந்து பல நாடுகளுக்கும் சென்று, இஸ்லாமியப் பிரச்சாரம் செய்தனர். விரிவு
மாபெரும் இறைநேசச் செல்வர்களான இவர்கள் கடையநல்லூரில் ஹிஜ்ரி 1111 முஹர்ரம் 10 ஆம் நாள் வியாழக்கிழமை பிறந்தார்கள். தங்கள் தந்தையிடமே மார்க்கக் கல்வி பயின்ற இவர்கள் முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி (ரஹ்) அவர்கள் கனவில் தோன்றி அறிவித்த வண்ணம் மஸ்வூத் வலியுல்லாஹ் அவர்களிடம் பைஅத் (தீட்சை) பெற்றார்கள்.விரிவு
திருநெல்வேலி மாவட்டத்தில் பெட்டைக்குளத்துக்குத் தென் மேற்கே உள்ள ஊராகும் ஆற்றங்கரை. இறைநேசச் செல்வி பாத்திமாவும், அவரின் கணவர் ஷைகு முஹம்மது அலீயும் இங்கே அடங்கப் பெற்றுள்ளனர். விரிவு
ஜித்தாவின் ஆளுநராக இருந்து பணியாற்றிய இஸ்கந்தர் துல்கர்னைன் அவர்கள், சையிது இப்ராஹிம் வலியுல்லாஹ் அவர்களுடன் தமிழ்நாடு வந்து, அவர்கள் நடத்திய போர்களிலெல்லாம் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள். விரிவு
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கமுதியில் ஏரிக்கரை அருகில் அடங்கி இருக்கும் இறை நேசச் செல்வரான இவர்கள் வட இந்தியாவில் பிறந்தவர்கள். இவர்களின் பெற்றோர்கள் இவர்களுக்கு இளமையில் மணமுடிக்க விழைந்த பொழுது இவர்கள் அதனை ஏற்க மறுத்தார்கள். எனினும் பெற்றோர்கள் வற்புறுத்தவே, “அவ்விதமாயின் நான் சொல்லாமல் கொள்ளாமல் போய் விடுவேன். அதன் பின் தாங்கள் என்னை ஒருபோதும் காணமாட்டீர்கள்” என்று இவர்கள் கூறினார்கள். விரிவு
மிகப் பெரும் இறைநேசச் செல்வர்களாகிய இவர்கள் வட இந்தியாவில் உள்ள மாணிக்கப்பூரில் ஹிஜ்ரி 910 ரபீஉல் அவ்வல் பிறை 10 (கி.பி. 1490) இல் பிறந்தார்கள். தந்தை சையிது ஹஸன் குத்தூஸ், இமாம் ஹஸன் (ரலி) அவர்களின் வழி வந்தவர். அன்னை சையிதா பாத்திமா இமாம் ஹுஸைன் (ரலி) அவர்களின் வழி வந்தவர். இவர்கள் முஹம்மது கெளது குவாலியரி (ரஹ்) அவர்களிடம் ஆன்மீகப் பயிற்சி பெற்றார்கள். பின்னர் அவர்களின் ஆசி பெற்று அவர்கள் தங்களுக்கு அளித்த “ஜவாஹிருல் ஹம்ஸா” என்ற நூலையும் பெற்றுக் கொண்டு அவர்களின் ஆன்மீக மாணவர் 404 பேர்களுடன் ஹிஜ்ரி 947 ஷவ்வால் பிறை 6 திங்கட்கிழமை புறப்பட்டு உலகின் நாலா பக்கங்களுக்கும் சென்று தீன் சுடர் கொளுத்தினார்கள். விரிவு
சதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் இயற்பெயர் சதக்கா என்பதாகும். இவர்கள் அபூபக்ர் (ரழி) அவர்களின் வழி வந்த சுலைமான் வலி அவர்களுக்கும், இஸ்லாத்தை தழுவி எமனேஸ்வரத்தில் வந்து தங்கி வாழ்ந்து வந்த ஒரு வட நாட்டு பிராமணக் குடும்பத்தில் தோன்றிய பாத்திமா என்ற மங்கைக்கும் மூன்றாவது மகனாகக் காயல்பட்டணத்தில் ஹிஜ்ரி 1042ஆம் ஆண்டில் பிறந்தனர். இவர்களும், இவர்களுடன் பிறந்த நால்வரும் இறைநேசச் செல்வராகவே விளங்கினர். விரிவு
இமாமுல் ஆரிபின் சையதினா ஹல்ரத் உவைஸுல் கரனீ (ரஹ்) அவர்கள் யமன் தேசத்தில் வாழ்ந்து வந்தார்கள். பகல் முழுவதும் ஒட்டகை மேய்த்து, மாலையில் கிடைக்கும் கூலியைப் பெற்று தமது வயது முதிர்ந்த - பார்வையிழந்து விட்ட தாயைப் பராமரித்து வந்தார். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ‘உஹது’ போரில் ஒரு பல் ஷஹீதாகி விட்ட செய்தி கேட்ட உவைஸுல் கரனீ அவர்கள் தமது பற்கள் முழுவதையுமே உடைத்தெறிந்தார்கள். பெருமானார் (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்திருந்தும், பெருமானாரவர்களை நேரில் காணாமலேயே தணியாத அன்பும், குறையாத பாசமும் கொண்டு சன்மார்க்கப் பிரச்சாரம் புரிந்து வந்தார்கள். வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் ‘கூபா’ நகரில் சிறியதொரு குடிசையில் வந்து தங்கினார்கள். என்னேரமும் இறைவணக்கத்திலேயே ஈடுபட்டிருப்பார்கள். அன்றாடம் கூலி வேலை செய்து கிடைக்கும் வருவாயில் தமது உணவுக்குப் போக எஞ்சியவை அனைத்தையும் ஏழை எளியவர்க்கும், எத்தீம்களுக்கும் அளித்துதவுவார்கள். ஆண்டவனின் நல்லடியாராக - அவ்லியாவாக, தூற்றிய மக்களால் போற்றிப் புகழப்பட்ட நிலையில் வபாத்தானார்கள். விரிவு
முஹம்மது நிஜாமுத்தீன் ஒளலியா, (கி.பி. 1238 - கி.பி. 1325) இவர்கள் பிரபலமாக ஹஜ்ரத் நிஜாமுத்தீன் என்று அழைக்கப்படுகிறார்கள். ‘மஹ்பூபெ இலாஹி’, ‘சுல்தானுல் மஷாயிஃ’ என்னும் பட்டங்களைப் பெற்ற இந்த மாபெரும் இறைநேசச் செல்வரின் இயற்பெயர் முஹம்மது என்பதாகும். இவர்கள் கி.பி.1238 ஹிஜ்ரி 634இல் உத்திரப்பிரதேசம் மாநிலம் பதாயூனில் பிறந்தனர். ஹுஸைன் (ரழி) அவர்களின் வழி வந்த இவர்களின் மூதாதையர் புகாராவிலிருந்து இங்கு வந்து வாழ்ந்து வந்தார்கள். இவர்களின் தந்தை சையிது அஹ்மது இவர்கள் ஐந்து வயதுச் சிறுவராக இருக்கும் பொழுதே காலமாகி விட்டனர். இவரது அன்னை சுலைகாவால் வளர்க்கப்பட்ட இவர்கள் இளமையிலேயே ஏழு வகைக் ‘கிராஅத்’துகளையும் பயின்று தேர்ச்சி பெற்றனர். பன்னிரண்டு வயதில் மார்க்க அறிஞர்களுடன் தர்க்கம் செய்வதில் சிறந்து விளங்கி, தர்க்க வல்லுநர் என்று பொருள்படும் ‘பஹ்ஹாஸ்’ என்ற சிறப்புப் பெயரும் பெற்றனர். விரிவு