Home


பிஷ்ர் இப்னு பரா 

ரழியல்லாஹு அன்ஹு

        அண்ணல் நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான பரா இப்னு மஃரூரின் மகனான இவர் கி.பி. 622 ஆம் ஆண்டில் நடந்த இரண்டாவது அகபா உடன்பாட்டில் தம் தந்தையுடன் வந்து இஸ்லாத்தை தழுவியவர். மேலும் இவர் பத்ர், உஹத், அகழ்ப்போர் ஆகியவற்றிலெல்லாம் கலந்து கொண்டார். கைபர் போரில் கலந்து கொண்ட இவர், அதன் முடிவில் ஜைனப் இப்னு ஹாரித் என்ற யூதப் பெண், அண்ணல் நபி (ஸல்) அவர்களுக்கு விருந்தளிக்கும் நிகழ்வில் அண்ணல் நபி (ஸல்)  அவர்களின் முன் நஞ்சூட்டப்பட்ட இறைச்சியை அன்பளிப்பாகக் கொண்டு வந்து வைத்த பொழுது, இவரும் அதனை உண்டார். உடனே அண்ணல் அவர்கள் அதில் ஒரு துண்டை எடுத்துக் கடித்ததும் இவரை நோக்கி,”உண்ணாதே! அது நஞ்சூட்டப் பட்டிருப்பதாக என்னிடம் கூறுகிறது” என்று கூறினார். ஆனால் அதற்குள் அவ்விறைச்சித் துண்டுகளின் ஒன்றை பிஷ்ர் இப்னு பரா (ரழி) அவர்கள் கடித்து விழுங்கி விட்டார்.

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் வருத்தம் ஏற்படும் என்று எண்ணி

        அப்பொழுது பிஷ்ர் அண்ணல் நபி (ஸல்) அவர்களை நோக்கி, “இறைவன் மீது ஆணையாகக் கூறுகிறேன். அதை உண்ணும் பொழுது எனக்கு இனம் தெரியாத ஒருவித அருவருப்பாகத்தான் இருந்தது. ஆனால், அதனை நான் தங்களின் முன் கக்கி விட்டால் தங்களுக்கு வருத்தம் ஏற்படுமென்று எண்ணி விழுங்கிவிட்டேன். அது தங்களுடைய உயிரை மாய்த்து விடின் அதன்பின் நான் இந்த உலகில் வாழ்ந்து தான் என்ன பயன்?” என்று கூறினார்.

        இவர் அடுத்த கணம் அவ்விடத்திலேயே இறந்தார் என்றும், ஒராண்டு கழித்து இறந்தார் என்றும் இரு வேறு விதமாகக் கூறப்படுகிறது. அவ்வுணவு சோதனைக்காக ஒரு நாய் முன் போடப்பட்ட பொழுது அதனை உண்ட அடுத்த கணம் அது செத்தது என்று கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட தொந்தரவின் காரணமாக

        இதனால் ஏற்பட்ட தொந்தரவின் காரணமாக அண்ணல் நபி (ஸல்) அவர்கள் பல தடவை இரத்தம் குத்தி எடுத்துக் கொண்டனர். இதன் பின் அவர்களுக்கு எவரேனும் உணவு அன்பளிப்பாகக் கொண்டுவரின் அதில் ஒரு பிடி எடுத்து அதனைக் கொண்டு வந்தவரையே உண்ணுமாறு கூறும் வழக்கத்தை மேற்கொண்டனர், அண்ணல் நபி (ஸல்) அவர்கள். இதனால் ஏற்பட்ட பலவீனத்தின் காரணமாகவே அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து சொற்பொழிவாற்ற மேடை (மிம்பர்) தயார் செய்யப்பட்டது.

        அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இறப்புப் படுக்கையில் கிடக்கும் பொழுது அவர்களைக் காண பிஷ்ரின் அன்னை வந்த பொழுது, “உம்முடைய மகனுடன் சேர்ந்து கைபரில் உண்ட நஞ்சு என் குடலை நறுக்கிக் கொண்டுள்ளது” என்று கூறினர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள்.

பனீஸலீம் கூட்டத்தின் ‘ஸையித்’ 

        இவர் அம்பெய்வதில், யூதர்களுடன் விவாதம் செய்வதிலும் வல்லுநராக விளங்கினார். இவரை அண்ணல் நபி (ஸல்) அவர்கள் இவரின் பனீஸலீம் கூட்டத்தின் ‘ஸையித்’ என்று கூறினர்.


கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

முந்தைய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் மக்கா வாழ்க்கை சுருக்கம்...

Aadam Nabi

நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Hamza RA

ஹம்ஜா இப்னு அப்துல் முத்தலிப் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Musab RA

முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.