அல்யஸவு அலைஹிஸ்ஸலாம்
திருக்குர் ஆனில் கூறப்பட்ட இருபத்தைந்து நபிமார்களில் இவர்களும் ஒருவர். இல்யாஸ் (அலை), பனீ இஸ்ராயீல்கள் ஒருவரின் இல்லத்தில் நுழைந்த பொழுது அங்குச் சிறுவர் அல்யஸவு நோயுற்றுக் கிடப்பதைக் கண்டு அவர்களுக்காக இறைஞ்சினர். அடுத்தகணம் அவர்கள் நலம் பெற்றனர். உடனே அல்யஸவு, “இறைவன் ஒருவன், அவனுடைய தூதர் இல்யாஸ் (அலை) என்று கூறி அவர்களை எங்கணும் பின் தொடர்ந்து செல்லும் மாணவராயினர்.
இல்யாஸ் (அலை) அவர்களை கொல்ல முயற்சி
ஒரிறை கொள்கையை ஏற்று பின்னாட்களில் மீண்டும் 70 அடியுள்ள பெண் சிலை ‘பஅலுவை’ வணங்கியதால் அல்லாஹ்வின் சினம் ஏற்பட்டு அவன் மகன் கடும் நோய் வாய்ப்பட்டான் என்றும் அவன் விரைவில் இறப்பான் என்றும் இல்யாஸ் (அலை) அவர்கள் கூறிய செய்தியை கேட்டு வெகுண்ட அரசன் இல்யாஸ் (அலை) அவர்களை ஏமாற்றி அழைத்து வந்து கொல்ல முயன்றான்.
இல்யாஸ் (அலை) அவர்கள் மலைப் பகுதியில் குகைக்குள் சென்று விட்ட பிறகும் அவரைக் கொலை செய்து விட எண்ணிய அரசன் மூர்க்கத்தனமான பயங்கர ஆட்கள் பலரை அனுப்பி வைத்தான். ஆனால் இல்யாஸ் (அலை) அவர்களை, கொலைகாரர்களிடம் இருந்து இறைவன் பாதுகாத்தான். எனினும் மக்கள் நன்றி கொன்று உருவத் தொழும்பில் உழல்வதைக் கண்டு வருந்திய இவர்கள், இறைவனிடம் தம்மைப் பனீ இஸ்ராயீல்களின் தொடர்பே இல்லாது ஆக்குமாறு இறைஞ்சினார்கள்.
அல்யஸவு (அலை) அவர்கள் நபியாகியது
இல்யாஸ் (அலை) அவர்களை ஒரிடத்திற்குச் செல்லுமாறும் அங்கு ஒரு வாகனம் வரும் என்றும் அதில் ஏறிக்கொள்ளுமாறும் இறைவன் பணித்தான். அவ்வாறே அவர்கள் அல்யஸவுவுடன் செல்ல, ஒளிப் பிழம்பனைய ஒரு குதிரை வர அதில் ஏறிக் கொண்டனர். அப்பொழுது அல்யஸவு (அலை) அவர்கள், இல்யாஸ் (அலை) அவர்களை நோக்கி, “எனக்கு என்ன பணிக்கிறீர்கள்?” என்று வினவ இல்யாஸ் (அலை) அவர்கள் யாதும் கூறாது தங்களின் போர்வையை அவர்கள் மீது வீசி எறிந்தனர்.
இதன் பின்னர் இல்யாஸ் (அலை) அவர்களின் பிரதிநிதியாக அல்யஸவு (அலை) அவர்கள் இருந்து மக்களுக்குத் தெளராத் வேதத்தைப் போதித்தனர்.
திருக்குர் ஆனில் இவர்களைப் பற்றி…
38:48. (நபியே!) இஸ்மாயீல், அல்யஸவு, துல்கிஃப்லு இவர்களையும் கவனித்துப் பாருங்கள். இவர்களனைவரும் நல்லடியார்களில் உள்ளவர்கள்தாம்.
38:49. (மேற்கூறிய) இவைகளெல்லாம் (நம்பிக்கையாளர்களுக்கு) நல்ல உதாரணங்களாகும். நிச்சயமாக (இத்தகைய) இறை அச்சமுடையவர்களுக்கு (நல்ல) இருப்பிடமுண்டு.
6:86. இஸ்மாயீல், அல்யஸவு (எலிஸை,) யூனுஸ், லூத் (இவர்களையும் நேரான வழியில் செலுத்தினோம்.) இவர்கள் அனைவரையும் உலகத்திலுள்ள அனைவரின் மீதும் மேன்மையாக்கியும் வைத்தோம்.
6:87. இவர்களுடைய மூதாதைகளிலும், இவர்களுடைய சந்ததிகளிலும், இவர்களுடைய சகோதரர்களிலும் (பலரை) மேன்மையாக்கி வைத்ததுடன் இவர்கள் அனைவரையும் தேர்ந்தெடுத்து நேரான வழியிலும் செலுத்தினோம்.
6:88. (இவர்கள் அனைவரும் சென்ற) இதுவே அல்லாஹ்வுடைய நேரான வழியாகும். தன் அடியார்களில் அவன் விரும்பியவர்களை அதில் செலுத்துகின்றான்.
அல்யஸவு (அலை) அவர்களின் அற்புதங்கள்
மக்களுக்கு இவர்கள் தெளராத் வேதத்தைப் போதித்து வந்தார்கள். அப்பொழுது இவர்கள் பற்பல அற்புதங்களை நிகழ்த்தினர் என்றும் உப்பு நீரில் உப்பைத் தூவி அதனை நல்ல நீராக ஆக்கினர் என்றும், மலடியாக இருந்தவளை மகப்பேறு பெறச் செய்தார்கள் என்றும், அம்மகவு இறந்த பொழுது அதனை உயிர்தெழச் செய்தார்கள் என்றும், கடன்வாய்ப் பட்டிருந்த ஒரு விதவையிடம் இருந்த சிறிதளவு எண்ணெயை ஒரு பாத்திரத்தில் ஊற்றுமாறும் பின்னர் அத்னை மற்றொரு பாத்திரத்தில் ஊற்றுமாறும் இவ்வாறே செய்து கொண்டிருந்தால் அது பெருகிக் கொண்டிருக்குமென்றும், அவள் அதனை விற்றுத் தன் கடனைத் தீர்த்தாள் என்றும் கூறப்படுகிறது.
இவர்கள் நபி ஈஸா (அலை) அவர்களுக்கு ஏறத்தாழ ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களாவர்.
முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...
நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி நூஹ்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி இஸ்மாயில் (அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.
நபி மூஸா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி தாவூத்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி ஸுலைமான்(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....
நபி ஜகரிய்யா(அலைஹிஸ்ஸலாம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்....