Home


அல் ஜஹ்ராவி (நவீன அறுவை சிகிச்சையின் தந்தை)

        அபூ அல்-காசிம் கலஃப் இப்னு அல் -அப்பாஸ் அல்-ஜஹ்ராவி அல்-அன்சாரி (கி.பி.936 - கி.பி.1013) என்ற முழு பெயரையுடைய இவரை பிரபலமாக அல்-ஜஹ்ராவி என அறியப்படுகிறார், இவரை லத்தீன் மொழியில் அபுல்காசிஸ் (Abulcasis) என மேற்கத்திய உலகத்தில் அழைக்கின்றனர். இவர் அந்துலுசியா மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் வேதியியலாளர் ஆவார். இடைக்காலத்தின் மிகப் பெரிய அறுவை சிகிச்சை நிபுணராகக் கருதப்படுகிறார்.

தொடக்க கால வாழ்வு

        அந்துலுசியா என்றழைக்கப்படும் இன்றைய ஸ்பெயினில் அன்றைய இஸ்லாமிய தலைநகராக இருந்த கொர்தோபாவிலிருந்து வடமேற்கே 6 மைல் தூரத்து புறநகர் பகுதியான அல் ஜஹ்ரா என்ற இடத்தில் கிபி 936 க்கும் 940 க்கும் இடையே பிறந்தார்.  பிறந்தது, வளர்ந்தது, கல்வி, தொழில்,  என எல்லாமே கொர்தோபாவில் தான். தொழில் நிமித்தமாகவோ அல்லது கல்விக்காகவோ அல்லது வேறு காரணத்துக்காகவோ வேறு எங்கும் செல்லவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் மருத்துவத்திற்காக  உழைத்த  உத்தமர் மறைந்ததும் கொர்தோபாவில் தான்.

கொர்தோபா பற்றி சிறு குறிப்பு

        கி.பி எட்டாம் நூற்றாண்டில் அந்துலூசியா  இன்றைய ஸ்பெயினில் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்ததும் உமையா கலிஃபா முதலாம் அப்துற் ரஹ்மான் கொர்தோபாவை கி.பி.755ல் நிர்மாணித்தார். அது பத்தாம் நூற்றாண்டில்  மிகச் சிறந்த தலைநகரமாக விளங்கியது. இதை உலகின் ஓர் அதிசயம் என்றால் மிகையாகாது. காரணம் வளம் மிகுந்த அக் காலக்கட்டத்தில்  அதன் மக்கட்தொகை பத்து லட்சம், குடியிருப்புக்கள் (வீடுகள் முதல் மாளிகை வரை) இரண்டு லட்சம், பள்ளிவாசல்கள் 600, பொது குளியல் அறை 900, ஆரம்பக் கல்விக்கூடம் 80, உயர்நிலைப் பள்ளிகள் 27, பொது நூலகம் 300, அவற்றில் இருந்த நூல்களின் எண்ணிக்கை 10,00,000. (இப் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் அம்மக்களின் செல்வம், கல்வி, வாழ்க்கைத் தரம் எப்படி இருந்திருக்கும் என்பதை கணித்துக்கொள்ளவும்). அப்போது ஆட்சி செய்த கலிஃபா அல் நாசர் தனது பிரத்தியேக நூலகத்தில் 30,000 நூற்கள் இருந்தன. அவற்றில் பெரும்பாலான நூல்களில் அடிக்குறிப்பும், கருத்துரையும் எழுதி வைத்திருந்தார்.

        இதே காலக்கட்டத்தில் ரோம் நகரின் மக்கட்தொகை 50,000 ஐ எட்டவில்லை. லண்டன் நகரின் மக்கட்தொகை 18,000 க்கும் குறைவு. அன்று ஐரோப்பாவின் மிகப் பெரிய நூலகம் என்று சொல்லப்பட்ட  The Library of the Monastery St. Gall in Switzerland ல் மொத்தமாக வெறும் 35 நூல்களே இருந்தன.

        ஐரோப்பாவின் கல்விக்கூடமாக இருந்த கொர்தோபாவைப் பற்றி 13 ம் நூற்றாண்டு இத்தாலிய கவிஞன் 'Lane-pool' இப்படி எழுதி வைத்துள்ளான்.

        “To Cordoba belong all the beauty and ornament

        கொர்தோபாவுக்கு அழகு மற்றும் ஆபரணம் அனைத்தும் சொந்தமானது

That delights the eye, or dazzles the sight.

அது கண்ணை மகிழ்விக்கிறது, அல்லது பார்வையை திகைக்க வைக்கிறது.

The dress is of banners of learning, well knit together

ஆடையே கற்றலுக்கான பதாகைகளாக, ஒன்றாக  பிணைக்கப்பட்டுள்ளது

By the men of science and the masters of every art”

விஞ்ஞான ஆண்கள் மற்றும் ஒவ்வொரு கலையின் மேதாவிகளால் ”

(source: Al Zahrawi-The Father of Modern Surgery Vol 2, No 2, April 2006)

கொர்தோபாவின் ஒரு தெருவின் காட்சி

அல் ஜஹ்ராவி தொடர்ந்த பணிகள்

அன்றைய காலக்கட்டத்தில் பெரும்பாலான அறிஞர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கினர். ஆனால் அல் ஜஹ்ராவி மற்றவர்களிடமிருந்து மாறுபட்டு நிற்கிறார். தான் எடுத்துக்கொண்ட துறையில் மட்டுமே கவனம் செலுத்தியதால் என்னவோ அதில் மாபெரும் நிபுணத்துவம் பெற்றார். இளம் வயதிலேயே மன்னர் இரண்டாம் அல் ஹாகமின் பிரத்தியேக  அரசவை மருத்துவராக மட்டுமில்லாது பொது மருத்துவமனையில் மருத்துவராகவும் மருத்துவப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். இவர் பெரும்பாலும் விபத்து மற்றும் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்ததின் மூலம் அறுவை சிகிச்சையில் தனி முத்திரை பதித்தார்.

ஐம்பதாண்டு கால மருத்துவ சேவையில் மருத்துவராக, அறுவை சிகிச்சை நிபுணராக, எலும்பு சிகிச்சை நிபுணராக, கண்மருத்துவ நிபுணராக, மருத்துவப் பேராசிரியராக, ஊட்டஉணவு நிபுணராக பரிணமித்தார்.  உலகிற்கு வரப்பிரசாதமாக அளித்தது அவர் எழுதிய ‘அத் தஸ்ரிஃப் லிமன் அஜிஜா அன் அத் தஃலிஃப்’ (The Method of Medicine) என்ற நூல்.  மருத்துவ உலகின் பேரகராதி என்று பின்னால் வந்த மேற்கத்திய அறிஞர்களால் சொல்லப்படுகிறது.

மேலும் பல சாதனைகள்

        முதன்முதலில் மார்பக புற்று நோய்க்கு சிறப்பு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினார். சிறுநீர்ப்பை (lithotrities for bladder stones) கல்லை எடுக்க மெட்டாலிக் ப்ளாடர் சிரிஞ்சை (Metallic Bladder Syringe) எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை இவரே விளக்குகிறார். புதிய உக்தியைக் கையாண்டு தைராய்டு நீர்க்கட்டிகளை நீக்கினார். அக்காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரியில் முன்னோடியாக இருந்து பல அறுவை சிகிச்சைகள் செய்துள்ளார்.

        இவர் தலைசிறந்த பல்மருத்துவராகவும் விளங்கியுள்ளார். பல் மருத்துவத்துக்காகப் பயன் படுத்த பல்வேறு வகையான ஆயுதங்களை இவரே வடிவமைத்து உருவாக்கினார். ஒழுங்கற்ற பல்வரிசைகளை எப்படி சீர்படுத்துவது என்பதை அல் தஸ்ரிஃபில் குறிப்பிட்டுள்ளார். தவிர செயற்கைப் பற்கள் தாயாரிக்கும் முறையையும் அவற்றை பதிக்கும் முறையையும் விளக்கியுள்ளார். வழக்கத்துக்கு மாறான நோயையும்(unusual disease), பரம்பரை இரத்த ஒழுக்கு நோயையும்  குணப்படுத்த  எத்தகைய மருந்து கொடுக்கவேண்டும் என்று முதன்முதலில் விளக்கியதும் இவரே. மாறிய கருத்தரிப்புக்கு (ectopic pregnancy) சிகிச்சை அளித்த முதல் மருத்துவரும் இவரே.  

அறுவை சிகிச்சை கருவிகள்

        ஏறக்குறைய 200 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைக்கான கருவிகளை வடிவமைத்தார். இவற்றில் 90% கருவிகள் அதே வடிவிலோ அல்லது சில மாற்றங் Modification களுடனோ  தற்காலத்திலும் பாவிக்கப்படுகின்றன. (Evidence:-Al-Thasrif Images) தஸ்ரிஃபில் இவர் விளக்கியுள்ள பல்வேறு வகையான அறுவை சிகிச்சை முறைகள் பிரமிப்பூட்டுவனவாக இருக்கிறது என்கின்றனர்.

        Cauterization தீய்த்தல் முறை மூலம் Viral Warts நீக்குதல், இரத்த ஓட்டத்தை நிறுத்துதல் முறையை செய்து காட்டி தனது நூலிலும் விளக்கியுள்ளார். இதுவே தற்காலத்திலும் உபயோகிக்க படுகிறது. Diathermy Cauterization முறையே தற்காலத்தில் அறுவை சிகிச்சைகளில் இரத்த இழப்பை தடுக்க பயன்படுத்தப் படுகிறது. இது சிசேரியன் முதல் சகல அறுவை சிகிச்சைகளிலும் பயன்படுத்தப் படுகிறது.

        சில வகையான தலைவலிக்கு தலையில் உள்ள தமனியை (Temporal Artery) தற்காலிக  வெட்டுதல் தீர்வை தரும் என்பதை விளங்கியதோடு தனது நூலிலும் குறிப்பிட்டுள்ளார். இதுவே தற்காலத்தில் trigeminal neuralgia என்று அழைக்கப் படுவதோடு அதே அறுவை சிகிச்சையே தற்போதும் தீர்வாக உள்ளது.

        மேலும் எலும்பு முறிவு, மூட்டுகளின் பிரச்சினை, மூக்கு எலும்பு, முள்ளெலும்பு (vertebrae)  முறிவுகள் பற்றி விரிவாக எழுதியுள்ளார்.

அல்-ஜஹ்ராவியால் விளக்கப்பட்ட சில அறுவை சிகிச்சை உபகரணங்கள்

அல் ஜஹ்ராவி கண்டுபிடித்த கருவிகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது மூன்று வகை கருவிகள்.

  1. காதின் உட்பகுதியை சோதிக்கும் கருவி,
  2. சிறுநீர் குழாயின்(urethra) உட்பகுதியை சோதிக்கும் கருவி,
  3. தொண்டையிலிருக்கும் தேவையற்ற பொருளை (foreign bodies) நீக்க அல்லது வெளிக்கொணர பயன்படுத்தும் கருவி.

அல் தஸ்ரிஃப் [Kitab al-Tasrif] (The Method of Medicine)

        முப்பது பிரிவுகள் (volumes) கொண்ட இந்நூல் பல்வேறு மருத்துவ செய்திகளை விளக்குகிறது. முதல் மூன்று பிரிவு  களில் 190 அத்தியாயங்களை  உள்ளடக்கி மருத்துவத்துறைக்குத் தேவையான எல்லா செய்திகளையும் சொல்கிறது. சுடுவைத்திய(cautery) முறையும் அதன் உபகரணங்கள், இரத்தம் வெளியேற்றுதல், cupping, காயமடைந்த உடலிலிருந்து அம்புகளை வெளியேற்றுதல் , மற்றும் காயங்கள் தையல்களுக்கான பல்வேறு வகையான ஊசிகள் மற்றும் நூல்கள்; எளிய மற்றும் கூட்டு முறிவுகள் குணப்படுத்தும் முறைகளை அறிமுகப்படுத்தினார்.

        இது சுமார் 150 வகையான அறுவை சிகிச்சை உபகரணங்களின் வரைபடங்கள், droppers and syringes, மருத்துவ-மருந்து தொழில்நுட்பத்தின் விளக்கங்கள், சிறுநீரக கற்களை அறுவை சிகிச்சை மூலம் வெளியேற்றும் விரிவான விளக்கங்கள், பல் சுகாதாரம், பல் பிடுங்குதல், போலி பற்கள் பொருத்துதல் பற்றி கூறப்பட்டுள்ளது. இறந்த சிசுக்களை cranioclastic delivery முறை மூலம் வெளியேற்றுவது பற்றி குறிப்பிட்டுள்ளார்.

Volume 1 & 2:  தன்னுடைய நாற்பது ஐம்பது வருட அனுபவங்களைக் குறிப்பிடுகிறார். தான் சந்தித்த நோயாளிகள், நோய்களின் தன்மை, நோயாளியின் மனோஇயல், நோயாளியுடனான உறவு முறை, உடற்கூறுவியல், கூற்றியல், மருந்துகள் முதலானவற்றை  குறிப்பிடுகிறார்.

Volume 3 to 9:  பல்வேறு வகையான மருந்துக்கள், விஷ மருந்துக்கள்;  புளித்து நுறைத்துப்போன பழைய காடி; புளிப்பு, இனிப்பு வகை மாத்திரைகள், மலச் சிக்கலை போக்கும் மருந்துகள்; எதிரிகளால் கொடுக்கப்பட்ட விஷங்கள் மற்றும் அவர்களின் மருந்தியல் பண்புகள் பற்றி விளக்கி உள்ளார்.

Volume 10 to 18:  பாலுணர்வு மற்றும் பிறப்புறுப்புகள்; கொழுப்பு மற்றும் உடல் பருமன், வினாகிரி சேர்த்த, சேர்க்கப்படாத மருத்துவ பாணிகள் , வாய் துர்நாற்றத்தை போக்கும் மருந்துகள் , காயங்களை குணமாக்கும்  பவுடர்கள் பற்றி குறிப்பிட்டுள்ளார்.

Volume 19 to 25:  Cosmetics and richly spiced perfumery, toiletries, hair dressing and delicacy and charmer adornments; eye salves. collyria and compresses; unguentum. unctions, embrocations, balms and liniments; dentifrices; prophylactic and preventive medical remedies and mouth gum drugs. பல்வேறுபட்ட உடல் கட்டிகள் , வீக்கங்கள் அவற்றுக்கான மருத்துவம், expectorants and dressings.

Volume 26 & 27: Therapy, and the properties of diets and drugs, and their reparation; restoration. amelioration and cooking procedures; identifying of cereals, breads, wines, waters, soft drinks, legumes, meats, fishes, and wools; and the suitability of clothing and outfitting of raiments and colors.

Volume 28 & 29: மருந்துகள் காலாவதி ஆதல், மருந்துகளுக்கு பெயரிடுதல், Aging of drugs; medico-pharmaceutical nomenclature, and technology and weight and measures.

Volume 30:  தனது புத்தகத்தின் 11ம் அத்தியாயத்தில் அறுவை சிகிச்சை சம்பந்தமான பல கொள்கைகளை முன்வைத்துள்ளார். அறுவை சிகிச்சைக்கு முன் மையை பாவித்து வெட்டும் இடத்தை அடையாளப்படுத்தும் முறையை அறிமுக படுத்தினார். அது தற்காலத்திலும் standard procedure ஆக கொள்ளப்படுகிறது. 26ம் அத்தியாயத்தில் காயங்களின் உடனடி தையல் , பிந்தைய தையல் பற்றிய வித்தியாசத்தை விளக்கியதோடு (differences between primary and secondary wound closure) காயத்துக்கு மருந்து கட்டுமுன் அதனை சுத்த படுத்துவதன் முக்கியத்துவத்தையும் விளக்கியுள்ளார்.

In (chapter 47 ) Gynecomastia எனும் ஆண்களுக்கு ஏற்படும் மார்பக வீக்கத்தை C – வடிவ வெட்டின் மூலம் சுரப்பி கலங்களை அகற்றும் முறையை விளக்கினார். (இதுவே தற்காலத்திலும் Gold Standard ஆக உள்ளது.)

இறுதிக் காலம்

        அறுவை சிகிச்சையின் தந்தையாக விளங்கிய இவர் மரணிப்பதற்கு இரண்டாண்டுகள் முன்பு காஸ்டிலிய – அந்துலுசிய சண்டையில் அல் ஜஹ்ரா நகரம் பெரும் பாதிப்புக்குள்ளானது. அந்நிகழ்வுக்குப் பின் கி.பி 1013 ல் தனது 77ம் வயதில் கொர்தோபாவில் மரணமடைந்தார்.

அவரது சிறப்புக்கள்

  1. பல் மருத்துவத்தில் தலை சிறந்த நிபுணராக இருந்தார். அவரது நூலில் பல்வேறு பல் மருத்துவத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய பல்வேறு கருவிகளை ஓவியமாக வரைந்ததுடன் பல்வேறு பல் அறுவை சிகிச்சைகளையும் விளக்கியுள்ளார்.
  2. சிதைந்துபோன அல்லது வரிசையற்ற பல் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முறையை விவாதித்துள்ளார்.
  3. சிதிலம் அடைந்த பற்களுக்குப் பதிலாக செயற்கை பற்கள் பொருத்தும் முறையை மேம்படுத்தியுள்ளார்.
  4. முதன்முறையாக பாரம்பரிய இரத்த ஒழுக்கு நோயையும் வழக்கத்துக்கு மாறான நோயையும் விவரித்துள்ளார்.
  5. அறிஞர் அம்ப்ரோஸ் பேர்(Ambroise Pare) க்கு முன்பே இரத்த குழாய்களை தைத்தல்  பற்றி விவரித்துள்ளார்.
  6. அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் கருவிகளின் விளக்கப்படங்களுடன் வழங்கிய முதல் மருத்துவர் அல் ஜஹ்ராவி ஆவார்.
  7. அறுவை சிகிச்சையில் எரிகாரத்தின் (caustics) பயன்பாட்டை ஓரளவு விளக்கிவிட்டு உள் நாக்கு அறுவை (tonsillectomy), மூச்சுகுழல் துளை அறுவை (tracheotomy), மண்டைத் திறப்பு (craniotomy) அறுவைகளை விரிவாக விளக்கியதோடு இறந்த சிசுவை (dead foetus) அறுவை மூலம் நீக்கியுள்ளார்.
  8. மூக்கின் விழுதை (polyp) நீக்க கொக்கி(hook)யை எப்படி உபயோகிக்கவேண்டும்;  இவர் கண்டுபிடித்த பல்ப் சிரஞ்சியைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கு எனிமா எப்படி கொடுக்கவேண்டும்;
  9. சிறுநீர்ப்பை கல்லை எடுக்க மெட்டாலிக் ப்ளாடர் சிரஞ்சியை Metallic Bladder Syringe) எப்படி பயன்படுத்தவேண்டும் என்பதை இவரே விளக்குகிறார்.
  10. சூடுகோல் கொண்டு தீய்த்து (cauterization) வியாதியை குணப்படுத்துவதில் நிபுணராக இருந்தார், இந்த கலையைப் பயன்படுத்தி 50 க்கு மேற்பட்ட அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார்.



கட்டுரைகளில் (ஸல்) என்பதை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றும் (அலை) என்பதை அலைஹிஸ் ஸலாம் என்றும் (ரழி) என்பதை ரழியல்லாஹு அன்ஹு என்றும் விரிவாக வசித்து கொள்ளவும்.

புதிய வெளியீடுகள்

MohammedNabiSAW

முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...

Abubakr

அமீருல் முஃமினீன் அபூபக்ர் (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Ayesha

உம்முல் முஃமினீன் ஆயிஷா (ரழியல்லாஹு அன்ஹு) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.

Socrates

உலக பெரும் அறிஞர் சாக்ரடீஸ் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Gandhi

மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Nehru

ஜவகர்லால் நேரு அவர்களின் வாழ்க்கை சுருக்கம்...


Khan

முஹம்மது யூசுப் கான் (மதுரை நாயகம்) அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


buddah

கௌதமபுத்தர் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.


Esha

ஈஸா அலைஹிஸ் ஸலாம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்.