Home


உலக அறிஞர்களின் வரலாறு

Socrates

கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் Posted on September 27, 2020

சாக்ரடீஸ் (Socrates) (கி.மு 470/469 – கி.மு 399, பிப்ரவரி 15 ) ஏதென்சைச் சேர்ந்த ஒரு மெய்யியலாளர் (தத்துவஞானி) ஆவார். மேற்கத்திய தத்துவ மரபின் முக்கியமான சின்னமாகத் திகழ்பவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவருடைய சீடர்கள் ஜெனோபன் (Xenophon) மற்றும் பிளேட்டோ (Plato) ஆகிய இவர்களும் புகழ்பெற்ற தத்துவஞானி ஆவார்கள். கிரேக்க நாட்டின் தத்துவஞானி என்றும், உலகத்தின் முதல் தத்துவஞானி என்றும் சாக்ரடீஸ் போற்றப்படுகிறார். விரிவு

Plato

பெரும் செல்வாக்குள்ள கிரேக்கத் தத்துவஞானி பிளேட்டோ Posted on October 18, 2020

பிளேட்டோ (Plato) (கிமு 427 - கிமு 347) பண்டைய கிரேக்கத்தில் கிளாசிக்கல் காலத்தில் பிளேட்டோ பெரும் செல்வாக்குள்ள தத்துவஞானியாக இருந்தார், இவர் சாக்ரடீஸின் சீடர், அரிஸ்டாட்டிலின் குரு. தலைசிறந்த கணிதவியல் வல்லுனர் ஆவார். சாக்ரடீஸின் மாணவரான இவர் தத்துவத் தர்க்கங்களை எழுதியுள்ளார். இவர் மேற்கு உலகின் முதல் கல்விக் கூடமாக ஏதென்ஸ் நகரில் பிளாட்டோனிஸ்ட் சிந்தனைப் பள்ளி என்ற அகாடமியை நிறுவினார். இவர் தனது ஆதரவாளர் சாக்ரடீஸ் மற்றும் தனது மாணவர் அரிஸ்டாட்டில் உடன் இணைந்து மேற்குலகின் தத்துவம் மற்றும் அறிவியலுக்கான அடிக்கல்லை நாட்டினார். விரிவு

Aristotle

பண்டைய உலகின் தத்துவஞானி அரிஸ்டாட்டில்Posted on November 01, 2020

அரிஸ்டாட்டில் (Aristotle ) (கி.மு.384 - கி.மு.322) இவர் பண்டைய உலகின் தத்துவஞானி, விஞ்ஞானி மற்றும் பல்துறை வல்லுநர் ஆவார். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் 170 புத்தகங்களுக்கு மேல் எழுதியுள்ளார். அவருடைய நூல்கள் அவர் காலத்தில் அறிவியல் செய்திகள் அடங்கிய கலைக்களஞ்சியமாகத் திகழ்ந்தன. வானவியல், விலங்கியல், கருவியல், புவியியல், இயற்பியல், உடலியல் ஆகியவை குறித்தும், பண்டைய கிரேக்கர்கள் அறிந்திருந்த அறிவுத்துறைகள் அனைத்தையும் பற்றி இவர் எழுதியிருந்தார். அத்துடன் கவிதை, நாடகம், இசை, தர்க்கம், சொல்லாட்சி, மொழியியல், அரசியல், இறையியல், ஒழுக்கவியல் ஆகியவையும் இவரின் எழுத்துகளில் இடம் பெற்றிருந்தன. அலெக்சாண்டர் இவருடைய சீடர் ஆவார். விரிவு

Mullah

முல்லா நஸ்ருத்தீன் சிறந்த நகைச்சுவையாக கதை எழுதியவர் Posted on February 27, 2022

முல்லா நஸ்ருத்தீன் என்பது அவருடைய முழுபெயர். இதில் முல்லா என்பது அறிஞர் - கல்விமான் என்பதைக் குறிக்கும் சிறப்பு அடைமொழியாகும். பல நாட்டினரும் இவரைத் தங்கள் நாட்டவர் என்று கூறிக்கொள்கின்றனர், எனினும் இவர் பிறந்தது துருக்கியில் உள்ள ”எஸ்கி ஷஹ்ர்” என்ற ஊரிலாகும். அங்கு ஒவ்வோராண்டும் இவர் தம் நிணைவு நாள் கொண்டாடப்படுகிறது. அப்பொழுது மக்கள் புத்தாடை புனைந்து இவர்தம் புகழ் பெற்ற விகடங்களை நடித்து மகிழ்கின்றார்கள். முல்லா நஸ்ருத்தீன் சிறந்த கவிஞர், சிறந்த நகைச்சுவையாக கவிதை எழுதுவதிலும் பேசுவதிலும் வல்லவர் ஆவார். இவருடைய இந்த புகழுக்கு அவர் எழுதிய கதைகள் சான்றாகும். இவருடைய கதைகள் யாவும் அவருடைய வாழ்க்கையில் நடந்தவற்றை ஒட்டியதாக இருந்தது. விரிவு

அனைத்து உலக அறிஞர்களின் வரலாறும், தொடர்ந்து இன்ஷாஅல்லாஹ் வெளி வருகிறது.