மருது பாண்டியர் எனப்படும் மருது சகோதரர்கள் தமிழ்நாட்டில் ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடிகளுள் குறிப்பிடத்தக்கவர்கள். ஆங்கிலேயரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட 1779 முதல் 1801 இறுதி வரை ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். பெரிய மருது, சின்ன மருது எனப்படும் இவர்கள் ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடிய அனைத்திந்திய குழுக்களையும் ஒன்றிணைத்துத் திரட்ட முயன்ற போதுதான் ஆங்கிலேயரின் அதிருப்திக்கும் கோபத்திற்கும் ஆளானார்கள். இவர்களது களம் சிவகங்கைச் சீமையைச் சேர்ந்த காளையார்கோயில் ஆகும். விரிவு
நாகூர் இஸ்மாயீல் முஹம்மத் ஹனீஃபா (25 டிசம்பர் 1925 - 8 ஏப்ரல் 2015) அவர்கள் நாகூர் E.M ஹனீஃபா என தமிழகத்தில் பிரபலமாக அறியப்படும், பிரபல இஸ்லாமியப் பாடகர் மற்றும் திராவிடக் கொள்கையில் பற்றுக் கொண்டவர். இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆரம்ப காலம் முதல் இறுதி வரை முக்கிய பங்கு வகித்தார். இவர் ஏறத்தாழ மேடைகளில் இரண்டாயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார். கலைஞர் கருணாநிதியும், இசை முரசு நாகூர் E.M ஹனீஃபாவும் சிறு வயது முதலே இயக்கத்தில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள். விரிவு
சீதக்காதி (கி.பி. 1640 - கிபி.1715) தமிழ்நாட்டின் தலைசிறந்த வள்ளல்களில் ஒருவர் ஆவார். “செத்தும் கொடை கொடுத்த சீதக்காதி” என்ற புகழ்ப் பெயர் இவருக்கு உண்டு. இதற்கு ஒரு கதை கூறப்பட்ட போதினும், இவர் இறக்கும் முன் தம் விரலிலிருந்த மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்துத் தாம் இறந்த பின் தம்மைக் காணவரும் முதல் புலவருக்கு அதைக் கொடுக்குமாறு கூறினார் என்பதும், அவ்விதம் வந்த முதல் புலவருக்கு அது வழங்கப்பட்டது என்பதுமே ஏற்றுக் கொள்ளத் தகுந்ததாய் உள்ளது. இவரின் இயற் பெயர் ஷைகு அப்துல் காதிர் என்பதாகும். அதுவே சீதக்காதி என்று மருவலாயிற்று. விரிவு