இஸ்லாமிய பொற்காலம் என சரித்திரத்தில் இடம் பெற்று உள்ள உலகின் மத்திய காலத்தில் வாழ்ந்த மாபெரும் அறிவுலக மேதையும், மருத்துவ பேரறிஞரும், தத்துவஞானியுமாகிய இவரின் இயற்பெயர் ஹுசைன் என்பதாகும். தந்தையின் பெயர் அப்துல்லாஹ் எனினும் இவர் ஸீனாவின் மகன் என்று பொருள்படும் இப்னு ஸீனா என்று அழைக்கப்பட்டார். இவருடைய பெயராகிய இப்னு ஸீனா என்பது ஹீப்ருமொழியில் அவென்ஸினா என ஆகி லத்தீனில் அவிஸென்னா என்று மருவி உள்ளது. இவர் மேனாட்டினரால் அவிஸென்னா என்றே அழைக்கப்படுகிறார். இவருடைய முழு பெயர் அபூ அலி அல் ஹுஸைன் இப்னு அப்துல்லாஹ் இப்னு ஸீனா என்பதாகும். விரிவு
அப்துல்லாஹ் முஹம்மது இப்னு முஹம்மது அல் இத்ரீஸி (கி.பி. 1100 - கி.பி. 1165) அவர்கள் முஹம்மது அல் இத்ரீஸி அல்லது அல் இத்ரீஸி என அறியப்படுகிறார். இவர் ஒரு புவியியலாளர், எழுத்தாளர், விஞ்ஞானி, எகிப்தாலஜிஸ்ட், மற்றும் கார்ட்டோகிராபர் (மேப்புகளை வரைவர் அல்லது உறுவாக்குபவர்) ஆவார். விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒருசேர ஒளிவீசிக் கொண்டிருந்த அல்-அந்தலுஸைப் (இன்றைய ஸ்பெயின்) பகுதியாகக் கொண்ட அல்மொராவித் தேசத்தில் ஸ்யூட்டோ (Ceuta) நகரில் அல் இத்ரீஸி பிறந்தார். கிறிஸ்டோபர் கொலம்பஸ் மற்றும் வாஸ்கோ டா காமா போன்ற ஆய்வாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகள் மற்றும் பயணங்களுக்கு பயன்படுத்திய மிகவும் மேம்பட்ட இடைக்கால உலக வரைபடங்களில் ஒன்றான (Tabula Rogeriana) தபுலா ரோஜெரியானாவை இவர் உருவாக்கினார். விரிவு
அபூ அல்-காசிம் கலஃப் இப்னு அல் -அப்பாஸ் அல்-ஜஹ்ராவி அல்-அன்சாரி (கி.பி.936 - கி.பி.1013) என்ற முழு பெயரையுடைய இவரை பிரபலமாக அல்-ஜஹ்ராவி என அறியப்படுகிறார், இவரை லத்தீன் மொழியில் அபுல்காசிஸ் (Abulcasis) என மேற்கத்திய உலகத்தில் அழைக்கின்றனர். இவர் அந்துலுசியா மருத்துவர், அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் வேதியியலாளர் ஆவார். இடைக்காலத்தின் மிகப் பெரிய அறுவை சிகிச்சை நிபுணராகக் கருதப்படுகிறார். விரிவு