மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (அக்டோபர் 2, 1869 - ஜனவரி 30, 1948), அவர்கள் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படுகிறார். இவ்வுலகிற்கு சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட அறவழிப் போராட்டத்தை அறிமுகபடுத்தி அதன் மூலம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக சத்தியாக்கிரக போராட்டம் அமைந்தது. விரிவு
ஜவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 – மே 27, 1964), அவர்கள், இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்) ஆவார்கள். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற போது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் (பிரதமர்) பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார். விரிவு
மருதநாயகம் பிள்ளை (என்ற) முஹம்மது யூசுப் கான், (பிறப்பு கி.பி 1725- இறப்பு கிபி 1764) பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் மெட்ராஸ் ஆர்மியில் கமாண்டோவாக பணிபுரிந்தார். அவர் பிரிட்டிஷ் இந்தியாவில் முதுகுளத்தூர் தாலுகா மேலபனையூர் என்ற கிராமத்தில் வீர சைவ வெள்ளாளர் குலத்தில் சாதரண விவசாய குடும்பத்தில் கி.பி 1725 ஆம் ஆண்டு பிறந்தார். பின்னர் இஸ்லாமியராக மாறி முஹம்மது யூசுப் கான் என்ற பெயரில் முஸ்லிமாக வாழ்ந்து வந்தார். மதுரையின் ஆட்சியாளராக பணி செய்த வேளை அவர் கான் சாகிப் என பிரபலமாக அறிய படுகிறார். விரிவு
அன்னை தெரேசா (Mother Teresa, பிறப்பு ஆகஸ்ட் 26, 1910 - இறப்பு செப்டம்பர் 5, 1997), அல்பேனியா நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவரும், இந்தியக் குடியுரிமை பெற்ற ரோமன் கத்தோலிக்க அருட்சகோதரியும் ஆவார். இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ ஆகும். 1950 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் “பிறர் அன்பின் பணியாளர்” என்ற கத்தோலிக்க துறவற சபையினை நிறுவினார். அதன் வாயிலாக ஏழை எளியோர்களுக்கும், நோய்வாய்ப்பட்டோருக்கும், அனாதைகளுக்கும், இறக்கும் தருவாயிலிருப்போருக்கும் சேவையாற்றினார். 1970 ஆம் ஆண்டுக்குள் இவர் சிறந்த சமூக சேவகர் எனவும், ஏழைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பரிந்து பேசுபவர் என்றும் உலகம் முழுவதும் புகழப்பட்டார். இவர் 1979 இல் அமைதிக்கான நோபல் பரிசினையும், 1980 இல் இந்தியாவின் சிறந்த குடிமக்கள் விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றார். விரிவு
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாஹிப் (கி.பி1896 - கி.பி.1972) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரான இவர், ஆங்கில ஏகாத்தியத்தின் ஆதிக்கப் பிடியிலிருந்து தங்க நிகர்த் தாய்த் திரு நாட்டை மீட்டெடுத்திடும் விடுதலைப் போராட்டத்தின் சிங்கநிகர் வீரராகத் தமது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர். சுதந்திரச் சுடர் பரப்பிய சரித்திரச் சாதனையாளராக வரலாற்று நாயகராக ஏற்றம் பெற்று அனைத்து மக்களாலும் போற்றப்படும் தன்னிகரில்லா தனிப் பெரும் தலைவர் என்பதை நாடு அங்கீகரித்து ஏற்றுக்கொண்டிருக்கிறது. அனைவராலும் அன்புடன் காயிதே மில்லத் என அழைக்கபடும் இந்த உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள். விரிவு