தாமஸ் ஆல்வா எடிசன் (கி.பி.1847 - கி.பி.1931) அவர்கள் மக்கள் மனம் மகிழ 1093 அமெரிக்கக் காப்புரிமையும், 1239 வெளிநாட்டுக் காப்புரிமையும் செய்த அறிவியல் கண்டுபிடிப்பாளர். எல்லோருக்கும் தெரிந்தவரையில் தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு விஞ்ஞானி. பலருக்கும் தெரியாதது அவர் ஒரு நல்ல தொழில்முனைவர் என்பது, இவரது பல தரப்பட்ட உற்பத்தி தொழில் முயற்சிகளால் படித்தவர்கள் அதிகமானோர் அவரிடம் வேலை வாய்ப்பு பெற்றனர். நாமும் அவர் போல் வெற்றி பெற அவர் நமக்கு விட்டு சென்ற வெற்றிச் சூத்திரம் இதுதான், 1% உள்ளுணர்வு + 99% உழைப்பு = 100% வெற்றி. விரிவு
சாய் லுன் (T'sai Lun கி.பி.57 – கி.பி.121) அவர்கள் உலகில் முதன் முறையாக கி.பி.105 ஆம் ஆண்டு காகிதத்தைக் கண்டு பிடித்தவர் தான் என்றே சீன வரலாறு திட்ட வட்டமாகக் கூறுகிறது. இச்சாதனைக்காகச் சீனாவில் இவர் பெரிதும் போற்றப்பட்டார். வேளாண்மையும், எழுத்து முறையும் சீனாவை விட மத்திய கிழக்கில் முன்னதாகவே முன்னேற்றமடைந்தது உண்மை தான். ஆனால், மேலை நாட்டு நாகரிகத்தை விடச் சீன நாகரிகம் பின் தங்கியதற்கு இதை மட்டும் காரணமாக கூற முடியாது. பொருத்தமான எழுது பொருள் இல்லாதிருந்தது, சீனப் பண்பாட்டு முன்னேற்றத்திற்குப் பெருந்தடங்கலாக அமைந்தது. எனினும், காகித்தை சாய் லுன் கண்டுபிடித்ததை யொட்டி நிலைமை அடியோடு மாறியது. விரிவு
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் (Albert Einstein, மார்ச் 14, 1879 – ஏப்ரல் 18, 1955) இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த விஞ்ஞானியாகவும், மிக முக்கியமான இயற்பியல் அறிஞராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை (Theory of Relativity) முன்வைத்ததுடன், குவாண்டம் எந்திரவியல், புள்ளியியற் எந்திரவியல் மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. விரிவு