காஞ்சிபுரம் நடராசன் அண்ணாதுரை C. N. Annadurai (15 செப்டம்பர், 1909 – 3 பிப்ரவரி, 1969) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதலமைச்சருமாவார். பரவலாக இவர் அறிஞர் அண்ணா என்றே அறியப்பட்டார். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் ஆவார். விரிவு
கண்ணியத்திற்குரிய காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயீல் சாஹிப் (கி.பி1896 - கி.பி.1972) இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவரான இவர், ஆங்கில ஏகாத்தியத்தின் ஆதிக்கப் பிடியிலிருந்து தங்க நிகர்த் தாய்த் திரு நாட்டை மீட்டெடுத்திடும் விடுதலைப் போராட்டத்தின் சிங்கநிகர் வீரராகத் தமது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர். சுதந்திரச் சுடர் பரப்பிய சரித்திரச் சாதனையாளராக வரலாற்று நாயகராக ஏற்றம் பெற்று அனைத்து மக்களாலும் போற்றப்படும் தன்னிகரில்லா தனிப் பெரும் தலைவர் என்பதை நாடு அங்கீகரித்து ஏற்றுக்கொண்டிருக்கிறது. அனைவராலும் அன்புடன் காயிதே மில்லத் என அழைக்கபடும் இந்த உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள். விரிவு